பெட்டிக்கடைக்காரருக்கு கத்திக்குத்து

பெட்டிக்கடைக்காரருக்கு கத்திக்குத்து

Update: 2022-03-15 19:27 GMT
நன்னிலம், மார்ச்.16-
மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் சந்திரகுமார்(வயது32). இவர் பேரளம் அருகே உள்ள போழக்குடியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்துபவர் பத்மநாதன்(41). பத்மநாதன் அடிக்கடி சந்திரகுமாரிடம் சென்று தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று பத்மநாதன்,  சந்திரகுமாரின் கடைக்கு சென்று தகராறு செய்து கத்தியால் சந்திரகுமாரை குத்தியதாக கூறப்படுகிறது. இதில் மயங்கி விழுந்த சந்திரகுமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில்  பேரளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பத்மநாதனை கைது செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்