ரெயில் நிலையத்தில் ஆர்ப்பாட்டம்
திண்டிவனம் ரெயில் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
திண்டிவனம்,
திண்டிவனம் ரெயில் நிலையத்தில் மஸ்தூர் யூனியன் திண்டிவனம் கிளை சார்பில் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து விட்டு மீண்டும் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு திண்டிவனம் கிளை செயலாளர் காமேஷ் தலைமை தாங்கினார். கிளை தலைவர் பக்கிரிநாத் முன்னிலை வகித்தார். இதில் துணைச் செயலாளர்கள் தினகரன், ராஜு, மருதமுத்து, நாகேந்திரன், பிரகாஷ் மற்றும் நிர்வாகிகள், தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.