மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மகாதானத்தெருவில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் நேற்று மதியம் 3.30 மணியளவில் இன்வெட்டர் பேட்டரிகள் உள்ள அறையில் இருந்து திடீரென்று புகை ஏற்பட்டு வங்கி முழுவதும் பரவியுள்ளது. உடனடியாக வங்கியில் இருந்த வாடிக்கையாளர்களை வெளியேற்றி விட்டு வங்கியில் இருந்த தீயணைப்பு சாதனங்களை கொண்டு வங்கி ஊழியர்கள் எரிந்த தீயை அணைத்து மேலும் தீ பரவாமல் தடுத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இன்வெட்டர் அறைக்கு மின்சாரம் செல்லும் வயர்களை துண்டித்தனர். இதனால் மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.