தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்

விழுப்புரத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-03-15 19:10 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் சென்னை சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர்கள் குமரன், மணிகண்டன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட தலைவர்கள் பாலமுருகன், திராவிட நாகு, ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மாநில தொழிற்சங்க தலைவர் பன்னீர்செல்வம், மாநில அமைப்பு குழு தலைவர் தமிழரசன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே அணைகட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசு மற்றும் மத்தியஅரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பபட்டன. இதில் 100-க்கும் மேற்பட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்