திருவாரூர் மாவட்ட சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
திருவாரூர் மாவட்ட சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
திருவாரூர்;
திருவாரூர் மாவட்ட சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
பிரதோஷ வழிபாடு
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. வலங்கைமான்அருணாச்சலேஸ்வரர், கைலாசநாதர், வைத்தீஸ்வரர், காசிவிசுவநாதர், விருப்பாச்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர், ஆவூா், பசுபதீஸ்வரர், அரித்துவாரமங்கலம் பாதாளேஸ்வரர், நல்லூர்கல்யாண சுந்தரேஸ்வரர், சந்திரசேகரபுரம் சந்திரமவுலீஸ்வரர் உள்ளிட்ட சிவாலயங்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கூத்தாநல்லூர்
கூத்தாநல்லூர் அருகே வேளுக்குடியில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ருத்ரகோடீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சிவபெருமான் கைலாச கோலத்தில் மேற்கு முகமாக அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். பழமை வாய்ந்த இக்கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் சிவபெருமான் மற்றும் நந்தி பகவானுக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், தேன், மஞ்சள்பொடி உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருமக்கோட்டை ஞானபுரீஸ்வரர் கோவிலில் பங்குனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்திகேஸ்வரருக்கு பால், பன்னீர், சந்தனம், விபூதி, திரவியப்பொடி ஆகியவற்றால் அபிஷேகம் நடைபெற்றது. அப்போது சிவனுக்கும் நந்திகேஸ்வரருக்கும் ஒரே நேரத்தில் தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நீடாமங்கலம்
நீடாமங்கலம் காசிவிசுவநாதர் கோவிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதைமுன்னிட்டு விசாலாட்சி காசிவிசுவநாதர், நந்திகேஸ்வரர் சன்னதிகளில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
ஆலங்குடி குருபரிகார கோவிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார்குழலியம்மன், நந்தி கேஸ்வரர் சன்னதிகளில் அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.
பின்னர் பிரதோஷ நாயகர் பிரகார உலா நடந்தது. இதைப்போல நீடாமங்கலம் கோகமுகேஸ்வரர் கோவில், நரிக்குடி எமனேஸ்வரர் கோவில், பூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோவில் உள்ளிட்ட சிவாலயங்களிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது.
வடுவூர்
வடுவூர் வடபாதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் நேற்று மாலை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து தீபாராதனை நடைபெற்றது.
மேலும் எடஅன்னவாசல் நாகநாதர் கோவில், மன்னார்குடி அருகே உள்ள பாமணி நாகநாதர் கோவில், திருராமேஸ்வரம் ராமநாதசாமி கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் மூலவர் சிவலிங்க திருமேனிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது.