சிறுமிக்கு பாலியல் தொல்லை

சிறுமிக்கு பாலியல் தொல்லை;

Update: 2022-03-15 18:46 GMT
திருச்சி பாலக்கரை காஜாப்பேட்டையை சேர்ந்தவர் ஜோசப் (வயது 52). இவர் தனது மனைவியுடன் சேர்ந்து வீட்டில் இட்லி வியாபாரம் செய்து வருகிறார். இந்தநிலையில் இவர் திருச்சியை சேர்ந்த 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, ஜோசப்பை கைது செய்தனர். இதற்கிடையே தனது தந்தை மீது பொய்ப்புகார் கொடுத்து விட்டதாக கூறி, ஜோசப்பின் மகன் வினோத்குமார் (32) நேற்று முன்தினம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து அவர் மீது பாலக்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்