நாமக்கல்லில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்லில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாமக்கல்:
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாமக்கல் பாரத ஸ்டேட் வங்கி முன்பு வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் வேங்கட சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இதில் தொழிற்சங்க நிர்வாகிகள் கிருஷ்ணசாமி, கோபி, சுரேஷ், ரேணுகா உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், வங்கி ஊழியர்களுக்கு 5 நாள் வேலை திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஓய்வூதிய திட்டத்தில் உள்ள குறைபாடுகளை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.