சாலைப்புதூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.37½ லட்சத்துக்கு வேளாண் பொருட்கள் ஏலம்
சாலைப்புதூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.37½ லட்சத்துக்கு வேளாண் பொருட்கள் ஏலம் விடப்பட்டன.
நொய்யல்,
விற்பனை கூடம்
நொய்யல் அருகே சாலைப்புதூரில் அரசு ஒழுங்குமுறை வேளாண்மை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் க.பரமத்தி மற்றும் கரூர் ஒன்றிய பகுதிகளான நொய்யல், மரவாபாளையம், வேட்டமங்கலம், குந்தாணிபாளையம், தவுட்டுப்பாளையம், மூலிமங்கலம், புன்னம்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.
இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள், எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்துகொண்டு வேளாண் பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
தேங்காய், தேங்காய் பருப்பு
அதன்படி நேற்று நடந்த ஏலத்தில் 33.78½ குவிண்டால் கிலோ எடை கொண்ட 10 ஆயிரத்து 836 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.29.39-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.26.30-க்கும், சராசரி விலையாக ரூ.26.30-க்கும் என மொத்தம் ரூ.92 ஆயிரத்து 146-க்கு விற்பனையானது.
அதேபோல் 370.63½ குவிண்டால் எடை கொண்ட 775 மூட்டை தேங்காய் பருப்பு ஏலத்திற்கு கொண்டுவரப்பட்டன. இதில் முதல் தரம் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.93.80-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.92.39-க்கும், சராசரி விலையாக ரூ.93.39-க்கும், 2-ம் தரம் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.93.41-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.89.29-க்கும், சராசரி விலையாக ரூ.90.39-க்கும் என மொத்தம் ரூ.33 லட்சத்து 92 ஆயிரத்து 667-க்கு விற்பனையானது.
ரூ.37½ லட்சத்துக்கு ஏலம்
அதேபோல் 19.50 குவிண்டால் கிலோ எடை கொண்ட 26 மூட்டை கருப்பு எள் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.141.09-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.127.09-க்கும், சராசரி விலையாக ரூ.139.09-க்கும் என ரூ.2 லட்சத்து 65 ஆயிரத்து 874-க்கு விற்பனையானது.
சாலைப்புதூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இந்த வாரம் நடந்த ஏலத்தில் மொத்தம் ரூ.37 லட்சத்து 50 ஆயிரத்து 687-க்கு வேளாண் பொருட்கள் ஏலம் விடப்பட்டன.