தேசிய கட்டுரை போட்டி

தேசிய கட்டுரை போட்டியில் சிவகங்கை பேராசிரியர்கள் 2-வது இடம் பிடித்தனர்

Update: 2022-03-15 18:37 GMT
காரைக்குடி, 
டெல்லியில் உள்ள தேசிய சட்ட பல்கலைக்கழகத்தின் சார்பில் உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தையொட்டி கட்டுரை போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா முழுவதும் நுகர்வோர் பாதுகாப்பு குறித்து ஏராளமானோர் கட்டுரைகள் அனுப்பி இருந்தனர். இதில் தேவகோட்டை ஆனந்தா கல்லூரியின் வணிக மேலாண்மையியல் உதவி பேராசிரியர் ஜஸ்டின் மற்றும் திருப்பத்தூர் ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் கல்லூரியின் வணிக மேலாண்மையியல் உதவி பேராசிரியர் அமுதா ஆகியோரின் கட்டுரைகளும் இடம் பெற்றிருந்தன. இதில், தேசிய அளவில் அவர்கள் கட்டுரை 2-வது இடத்தை பெற்றது. இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஸ்கோயல் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

மேலும் செய்திகள்