இளையான்குடி,
தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மற்றும் கல்லூரிகள் தொழில் முனைவோர் மேம்பாட்டு கழகம் இணைந்து "அறிவுசார் சொத்துரிமைகள்" எனும் தலைப்பில் இணையவழியில் கருத்தரங்கம் நடைபெற்றது. விலங்கியல் துறை உதவி பேராசிரியர் பீர்முகமது அனைவரையும் வரவேற்றார். தொழில் முனைவோர் மேம்பாட்டு கழக ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் நாசர் சிறப்புவிருந்தினரை அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினராக சிவகங்கை 9 ஜெம்ஸ்அக்ரோ பீயுல்ஸ் நிறுவன மேலாளர் ராகேஷ் கலந்துகொண்டு உற்பத்தி பொருள்களின் உரிமைகள் பற்றியும், அதை மற்ற நிறுவனங்கள் மாற்ற முடியாது என்பது பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார். மேலும் தேவை அறிந்து தொழில் செய்யும் யுக்திகள் குறித்து விவரித்தார். கருத்தரங்கில் இணையவழியில் 62 மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். வணிகவியல் துறை உதவி பேராசிரியர் அப்துல் முத்தலிப் நன்றி கூறினார்.