தடுப்பு காவல் சட்டத்தில் சாராய வியாபாரி கைது

தடுப்பு காவல் சட்டத்தில் சாராய வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-03-15 18:13 GMT
விழுப்புரம், 

வளவனூர்அருகே சின்னகள்ளிப்பட்டு ஜெகநாதபுரம் காலனி பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி ரங்கநாயகி (வயது 43). சாராயம் விற்பனை தொடர்பாக இவரை வளவனூர் போலீசார் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர். சாராயம் விற்பனை, கடத்தல் தொடர்பாக ரங்கநாயகி மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. 

இவரின் இத்தகைய செயலை தடுக்கும் வகையில் ரங்கநாயகியை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா பரிந்துரை செய்தார். இதையடுத்து ரங்கநாயகியை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டுக்கு, கலெக்டர் மோகன் உத்தரவிட்டார்.

 இதையடுத்து   தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகலை  சிறைத்துறை அலுவலர்கள் மூலம் வேலூர் சிறையில் உள்ள ரங்கநாயகியிடம் போலீசார் வழங்கினார். 

மேலும் செய்திகள்