மகனை கொன்று தாய் தற்கொலை
லால்குடி அருகே மகனை கொன்று தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
லால்குடி, மார்ச்.16-
லால்குடி அருகே மகனை கொன்று தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தொழிலாளியின் மனைவி
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே சிறுமயங்குடி ஊராட்சி கொத்தமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ்குமார், கூலி தொழிலாளி. இவரது மனைவி சரண்யா (வயது 30). இவர்களுக்கு தாஷ்விக் என்ற மகன் இருந்தார். சரண்யா சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் தினேஷ்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் நேற்று காலையில் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டனர். வீட்டில் சரண்யாவும், அவரது மகனும் இருந்தனர்.
தற்கொலை
இந்நிலையில், தினேஷ்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் வீடு திரும்பினர். அப்போது, சரண்யா தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். மகன் தாஷ்விக் அருகே இறந்து கிடந்தார். மகனை கொன்று சரண்யா தற்கொலை செய்து இருக்கலாம் என தெரிகிறது.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் லால்குடி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக லால்குடி கோட்டாட்சியரும் விசாரணை நடத்தி வருகிறார்.