பெண்களை தாக்கியவர்கள் மீது வழக்குப்பதிவு

பெண்களை தாக்கியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது

Update: 2022-03-15 18:10 GMT
ராமநாதபுரம், 
ராமநாதபுரம் அருகே உள்ள ஆர்.காவனூரை சேர்ந்தவர் ரவி. லாரி டிரைவர்.  இவரை மனைவி பாக்கியம், மகள் பவித்ரா, மகளின் கள்ளக்காதலன் முருகானந்தம் ஆகியோர் சேர்ந்து உயிரோடு எரித்து கொலை செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குபதிவு செய்து 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 
இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் துப்பு துலக்கி இவர்களை கைது செய்வதற்கு முன்பாக ரவியின் இறுதி சடங்கு முடிந்து பாக்கியம், அவரின் மகள் பவித்ரா ஆகியோர் வீட்டில் இருந்தார்களாம். அப்போது அங்கு வந்த ரவியின் தம்பி முருகன், அவரின் மகன் மணி, பாஸ்கரன் மகன்கள் விஜய், தாஸ் ஆகியோர் ஆத்திரத்தில் பாக்கியத்தையும், பவித்ராவையும் தாக்கினார்களாம். இதுதொடர்பாக பாக்கியம் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்