ஏரியில் மூழ்கி தொழிலாளி சாவு

விழுப்புரம் அருகே ஏரியில் மூழ்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.;

Update: 2022-03-15 18:08 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் அருகே சோழகனூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 37). தொழிலாளி. இவர் அதே பகுதியில் உள்ள ஏரியில் குளிக்கச் சென்றார். அப்போது ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்ற அவர், எதிர்பாராதவிதமாக  சேற்றில் சிக்கி நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். 

இது குறித்த தகவலின் பேரில் விழுப்புரம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ஏரியில் இறங்கி ஆறுமுகத்தை பிணமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இது குறித்த தகவலின் பேரில் விழுப்புரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆறுமுகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்