மணல்மேட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மணல்மேட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மணல்மேடு:
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மணல்மேட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
மணல்மேடு பஸ் நிலையம் அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முன்னாள் மாவட்ட அமைப்பாளர் ஈழவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், மணல்மேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை வட்டார தலைமை ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்த வேண்டும். தரம் உயர்த்தும் வரை 24 மணி நேரமும் ஆஸ்பத்திரி செயல்படும் வகையில் டாக்டர்களை சுழற்சி முறையில் பணியில் அமர்த்த வேண்டும். உள் நோயாளிகளின் பிரிவை விரிவாக்கம் செய்து உடனடியாக உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். மணல்மேடு கூட்டுறவு நூற்பாலை இருந்த இடத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வேலை வாய்ப்புக்கான தொழிற்பேட்டை அமைக்க வேண்டும். மணல்மேடு அடுத்த தலைஞாயிறில் மூடப்பட்டுள்ள சர்க்கரை ஆலையை உடனே இயக்க நடவடிக்கை எடுக்க எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதில் கடலங்குடி ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்மோகன், ஒன்றிய பொறுப்பாளர்கள் சாமிசீசர், பாரதிவளவன், நகர செயலாளர் வரதராஜன் உள்பட விடுதலை சிறுத்தைகள் கட்சி பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.