பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்

Update: 2022-03-15 17:57 GMT
ராமேசுவரம், 
ராமேசுவரம் எம்.ஆர்.டி. நகர் பகுதியில் செயல்படும் தீயணைப்பு நிலையம் அருகே வனத்துறைக்கு சொந்தமான இடங்கள் உள்ளதாகவும், இதனை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக வனத்துறையினர் அங்கு வந்தனர். இதனிடையே அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வனத்துறையினரை கண்டித்தும் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து வனத்துறையினர் பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ராமேசுவரம் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட வன அதிகாரி பகான்ஜெகதீஷ் சுதாகர் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் உதவி வனபாதுகாவலர் கணேசலிங்கம், ஏ.எஸ்.பி. தீபக், தாசில்தார் மார்ட்டின், ராமேசுவரம் நகரசபை தலைவர் நாசர் கான், துணை தலைவர் தட்சிணாமூர்த்தி, முன்னாள் நகர சபை தலைவர் அர்ஜூனன், அ.தி.மு.க. நகர செயலாளர் கே.கே.அர்ஜுனன், எம்.ஆர்.டி. நகர் நகர்தலைவர் முனியசாமி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வனத்துறைக்கு சொந்தமான ஆக்கிரமிப்பில் உள்ள இடங்களை மட்டும் ஒரு மாதத்திற்குள் காலி செய்ய வேண்டும் என கூறினர். அதை பொதுமக்களும் ஏற்றுக் கொண்டதை தொடர்ந்து சமாதான் கூட்டம் அமைதியாக முடிந்தது.

மேலும் செய்திகள்