ராமநாதபுரம்,
திருப்புல்லாணி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகைராஜா தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பொக்காரனேந்தல் சாத்துடைய அய்யனார்கோவில் அருகில் அந்த வழியாக வந்த லாரியை மடக்கி நிறுத்த முயன்றனர். போலீசாரை கண்டதும் லாரியை நிறுத்திவிட்டு அதில் இருந்தவர் தப்பி ஓடிவிட்டார். இதனை தொடர்ந்து போலீசார் லாரியை சோதனையிட்டபோது அனுமதியின்றி மணல் அள்ளி வந்தது தெரிந்தது. லாரியை பறிமுதல் செய்த போலீசார் இதுதொடர்பாக தப்பிஓடிய பொக்காரனேந்தலை சேர்ந்த அப்துல்லா மகன் பஷீர் என்பவரை தேடிவருகின்றனர்.