கொத்தடிமைகளாக வேலை செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மீட்பு
கொத்தடிமைகளாக வேலை செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மீட்கப்பட்டனர்
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்த பாண்டியூர் அருகே கே.வலசை பகுதியில் செங்கல் சூளை ஒன்றில் 3 குழந்தைகள் அவர்களது பெற்றோர் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கொத்தடிமை முறையில் வேலை பார்ப்பதாக ராமநாதபுரம் சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட நீதிபதியுமான சண்முகசுந்தரம், செயலாளர் கதிரவன் ஆகியோருக்கு புகார் வந்தது. இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க அவர்கள் உத்தரவிட்டனர். அதன்பேரில் பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் முருகன் தலைமையில் அதிகாரிகள் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் ரூ.60 ஆயிரம் கடனுக்காக கொத்தடிமைகளாக வேலை செய்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர்களை அதிகாரிகள் மீட்டனர். மேலும் இது தொடர்பாக செங்கல்சூளை உரிமையாளரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.