ரெயில் டிக்கெட் விற்ற 2 பேர் கைது
ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்து அதிக விலைக்கு விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.;
தானே,
தானே ராபோடி பகுதியில் தொலைதூர எக்ஸ்பிரஸ் ரெயில் டிக்கெட்டுகள் அதிகவிலைக்கு விற்கப்படுவதாக ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அப்பகுதியில் நடத்திய விசாரணையில், ரயிஸ் சபீர்கான் (வயது49) மற்றும் அஸ்லம் ஜாவேத் அன்சாரி (25) ஆகிய 2 பேர் சட்டவிரோதமாக டிக்கெட்டுகளை ரெயில்வே இணைய தளத்தில் பெற்று அதிகவிலைக்கு விற்று வந்தது தெரியவந்தது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, அவர்களை கைது செய்தார். அவர்களிடம் இருந்து அதிகளவில் ரெயில் டிக்கெட்டுகள், கம்ப்யூட்டர், செல்போன்கள் இருந்ததை பறிமுதல் செய்தனர்.