பனை மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி
பனை மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலியானர்
ராமநாதபுரம்,
திருப்புல்லாணி அருகே உள்ள வண்ணாங்குண்டு பகுதியை சேர்ந்தவர் அப்துல்ரகுமான் (வயது 55). கூலித்தொழிலாளி. இவருக்கு 7 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் அப்துல்ரகுமான் அருகில் உள்ள நாகநாத சமுத்திரம் பகுதிக்கு பனை ஓலை வெட்ட சென்றுள்ளார். மீனாம்பாள் என்பவருக்கு சொந்தமான தோப்பில் நேற்று காலை பனை ஓலை வெட்டிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக பனை மரத்தில் இருந்து தவறி விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அப்துல்ரகுமான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருப்புல்லாணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.