இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை:
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் நீதிசோழன் தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினர் கணபதி, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் மாசிலாமணி, வேதநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட செயலாளர் இடும்பையன் கலந்துகொண்டு பேசினார்.
கோஷமிட்டனர்
ஆர்ப்பாட்டத்தில் விவசாய தொழிலாளர்களுக்கு மகாத்மாகாந்தி தேசிய வேலைஉறுதி திட்டத்தின்கீழ் தொழிலாளர்களுக்கு 200 நாட்களுக்கு வேலை வழங்க வேண்டும். தினக்கூலியாக ரூ.600 வழங்க வேண்டும்.
60 வயதான விவசாய தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பொது வினியோகத்தை முறைப்படுத்த வேண்டும். மத்திய அரசு விவசாயத்திற்கு தனி பட்ஜெட் கொண்டு வரவேண்டும். நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் நகர நிர்வாகிகள் சர்புதீன், ஸ்ரீதேவி, நகர இளைஞரணி செயலாளர் மனோன்ராஜ், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் தனசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.