அய்யனார் கோவில் குடமுழுக்கு
ஆக்கூரில் அய்யனார் கோவில் குடமுழுக்கு நடந்தது.
திருக்கடையூர்:
திருக்கடையூர் அருகே ஆக்கூர் ஊராட்சியில் உடையார்கோவில் பத்து கிராமத்தில் அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் குடமுழுக்கு நடத்த திட்டமிட்டு திருப்பணிகள் நடந்தன. திருப்பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து கடந்த 12-ந் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கின. நேற்று முன்தினம் 4-வது கால யாகசாலை பூஜைகளை தொடர்ந்து, கடங்கள் புறப்பாடு நடந்தது. பின்னர் கோவில் விமான கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. முன்னதாக 13-ந்தேதி இரவு நடந்த யாகசாலை பூஜையில் தருமபுர ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கலந்து கொண்டார். விழா ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் சந்திரமோகன் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர். குடமுழுக்கையொட்டி செம்பனார்கோவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.