கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி ஆட்டு கிடாய் சண்டை போட்டி

திருப்புவனம் அருகே கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி ஆட்டு கிடாய் சண்டை போட்டி நடந்தது

Update: 2022-03-15 17:19 GMT
திருப்புவனம், 

திருப்புவனம் அருகே கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி ஆட்டு கிடாய் சண்டை போட்டி நடந்தது. 

ஆட்டு கிடாய் சண்டை 

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் யூனியனை சேர்ந்தது பொட்டப்பாளையம் கிராமம். இந்த கிராமத்தில் மந்தையம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆட்டு கிடாய் முட்டு சண்டை போட்டி நடைபெற்றது.
இந்த போட்டிக்காக மைதானம் போல் திடல் உருவாக்கப்பட்டு இருந்தது. அதை சுற்றிலும் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. போட்டியை மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி ரவிக்குமார் தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து கிடாய்கள் களத்தில் இறக்கப்பட்டு போட்டி நடந்தது. அப்போது அங்கு திரண்டு இருந்த பொதுமக்கள் ஆரவாரம் செய்தனர். போட்டியில் கலந்து கொண்ட அனைத்து கிடாய்களுக்கும் பொங்கல் பானைகள் பரிசாக வழங்கப்பட்டது. 

பரிசுகள் 

மேலும் கிடாய் முட்டு போட்டியில் வெற்றி பெறும் கிடாய்களின் உரிமையாளர்களுக்கு பீரோவும், சிறப்பாக சண்டையிடும் கிடாய்களின் உரிமையாளர்களுக்கு குத்துவிளக்கும் வழங்கப்பட்டது. இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கும் மேற்பட்ட கிடாய்களை உரிமையாளர்கள் கொண்டு வந்திருந்தனர்.
இந்த போட்டியை காண மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பிற மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் திரண்டு வந்தனர்.

மேலும் செய்திகள்