திட்டக்குடி அருகே காயம் அடைந்த புள்ளி மானுக்கு சிகிச்சை மீண்டும் வனப்பகுதியில் விடப்பட்டது
திட்டக்குடி அருகே காயம் அடைந்த புள்ளி மானுக்கு சிகிச்சை மீண்டும் வனப்பகுதியில் விடப்பட்டது;
திட்டக்குடி
திட்டக்குடி அருகே உள்ள இடைச்செருவாய் மெயின் ரோட்டில் தண்ணீர் தேடிவந்த 2 வயது பெண் மான் ஒன்று வயல் ஓரமாக உள்ள கம்பி வேலியில் சிக்கி காயம் அடைந்து கிடந்தது. இதைப் பார்த்த அந்த பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் வன காப்பாளர் சங்கர், வன அலுவலர் காயத்ரி மற்றும் வன காவலர்கள் விரைந்து வந்து காயம் அடைந்த பெண் மானை மீட்டு சிகிச்சைக்காக இடைச்செருவாய் கிராமத்தில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கால்நடை மருத்துவர் ராமநாதன் அந்த மானுக்கு சிகிச்சை அளித்தார். பின்னர் அந்த பெண் மானை நாங்கூர் வனப் பகுதியில் வனத்துறையினர் பாதுகாப்பாக விட்டனர்.