கோவை
கோவை சிங்காநல்லூர் கக்கன் நகரை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 27). இவர் சிங்காநல்லூரில் உள்ள ஆவின் டீ விற்பனையகத்தில் டீ மாஸ்டராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் டீக்கடையில் பணியில் இருந்தார். அப்போது அங்கு குடிபோதையில் வந்த 2 வாலிபர்கள் கார்த்திக்கிடம் சென்று தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது
இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர்கள் கார்த்திகை கைகளால் தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்த தகவலின்பேரில் சிங்காநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அந்த வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் மதுரை பொறையூரை சேர்ந்த அஸ்வின் ராஜன் (21), கோவை தீத்திபாளையம் விநாயகர் கோவில் வீதியைச் சேர்ந்த கவின் (24) ஆகியோர் என்பது தெரியவந்தது இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.