தர்மபுரிமாவட்டத்தில் மது விற்ற 21 பேர் கைது

தர்மபுரி மாவட்டத்தில் மது விற்ற 21 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-03-15 16:31 GMT
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதை தடுக்க போலீசார் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தர்மபுரி, நல்லம்பள்ளி, பாலக்கோடு, கம்பைநல்லூர், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அந்தந்த பகுதி போலீசார் சோதனை நடத்தினார்கள். மாவட்டத்தில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்ற 21 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 400 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்