அரூர் அருகே தொழிலாளி வீட்டில் நகை பணம் திருட்டு
அரூர் அருகே தொழிலாளி வீட்டில் நகை, பணம் திருட்டு போனது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரூர்:
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே மாம்பட்டி காந்தி நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 58). தொழிலாளி. இவர் வீட்டை பூட்டிவிட்டு குடு்ம்பத்துடன் வெளியில் சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு வந்தார். அப்போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 2 பவுன் நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.10 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து ராஜேந்திரன் அரூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.