காரிமங்கலத்தில் பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது
காரிமங்கலத்தில் பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
காரிமங்கலம்:
காரிமங்கலம் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பாலக்கோடு சாலையில் உள்ள முருகன் கோவில் பின்புறம் சிலர் பணம் வைத்து சூதாடுவது தெரியவந்தது. இதையடுத்து சூதாடிய ராமசாமி, பாபு, ராஜா உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.