தர்மபுரியில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தர்மபுரியில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி:
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் ராஜம்மாள் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் லில்லிபுஷ்பம், மாவட்ட செயலாளர் கவிதா, மாவட்ட பொருளாளர் தெய்வானை மற்றும் நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்களுக்கு பிடித்தம் செய்த ஜி.பி.எப். கணக்கு இருப்பு விவரத்தை தெரிவிக்க வேண்டும். அனைவருக்கும் மருத்துவ அட்டை வழங்கவேண்டும். 6 மாதத்திற்கு ஒருமுறை சம்பள பட்டியல் வழங்கவேண்டும். காலிபணியிடங்களை நிரப்பவேண்டும். அங்கன்வாடி மையத்திற்கு தேவையான காய்கறி, மளிகை பொருட்கள், கியாஸ் சிலிண்டர் வாங்க முன் பணமாக ரூ.10 ஆயிரம் அளிக்க வேண்டும். அங்கன்வாடி மையங்களுக்கு புதிய செல்போன் வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.