மாவட்ட அளவிலான கடற்கரை விளையாட்டு போட்டிகள்: 26-ந் தேதி நடக்கிறது

தூத்துக்குடி மாவட்ட அளவிலான கடற்கரை விளையாட்டு போட்டிகள் வருகிற 26 ந் தேதி தருவைகுளத்தில் நடக்கிறது.;

Update: 2022-03-15 15:51 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட அளவிலான கடற்கரை விளையாட்டு போட்டிகள் வருகிற 26-ந் தேதி தருவைகுளத்தில் நடக்கிறது.
இது குறித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கடற்கரை விளையாட்டு போட்டி
தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2021  22-ம் ஆண்டுக்கான மாவட்ட அளவிலான கடற்கரை கையுந்துப்பந்து, கடற்கரைகால்பந்து மற்றும் கடற்கரை கபாடி விளையாட்டுப் போட்டிகள் வருகிற 26-ந் தேதி காலை 7 மணி முதல் தருவைகுளம் கடற்கரையில் நடக்கிறது. இதில் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக போட்டிகள் நடக்கிறது.
முன்பதிவு
அதில் ஒரு கையுந்துபந்து அணியில் 2 விளையாட்டுவீரர், வீராங்கணைகள், கால்பந்து அணியில் 5 விளையாட்டுவீரர், வீராங்கணைகள் மற்றும் கபாடி அணியில் 6 விளையாட்டுவீரர், வீராங்கணைகள் கலந்து கொள்ளலாம். போட்டியில் கலந்து கொள்ளும் அணிகள் வருகிற 24-ந் தேதி மாலை 5 மணிக்குள் தங்கள் அணியின் விவரத்தை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மாவட்ட விளையாட்டு அரங்கம், தூத்துக்குடி, இ-மெயில்: dsotuti@gmail.com, தொலைபேசிஎண். 0461  2321149 என்ற முகவரியில் அலுவலக நேரத்தில் தொலைபேசி மூலமாகவே, இ-மெயில் மூலமாகவே பதிவு செய்து கொள்ளலாம்.
போட்டி நடைபெறும் நாளில் காலை 7 மணிக்கு தருவைகுளம் கடற்கரைக்கு வருகை தர வேண்டும். முன்பதிவு செய்த அணிகள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத் தொகை மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்படும். போட்டியில் வெற்றி பெறுபவர்கள் 2.4.22, 3.04.22 ஆகிய நாட்களில் தருவைகுளம் கடற்கரையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்