ஆடு வளர்ப்பு குறித்து பயிற்சி

சின்னசேலத்தில் ஆடு வளர்ப்பு குறித்து பயிற்சி நடந்தது.

Update: 2022-03-15 15:12 GMT
சின்னசேலம், 

சின்னசேலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கால்நடைத்துறை சார்பில் கால்நடை பராமரிப்பு குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது. இதற்கு சின்னசேலம் ஒன்றியக்குழு தலைவர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கி, பயிற்சியை தொடங்கி வைத்தார். கால்நடைத்துறை உதவி இயக்குனர் பெரியசாமி, சின்னசேலம் ஒன்றியக்குழு துணை தலைவர் அன்புமணி மாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சின்னசேலம் கால்நடை மருந்தக மருத்துவர் சுகம் வரவேற்றார். இதில் சின்னசேலம் ஒன்றியத்துக்குட்பட்ட கிராமங்களை சேர்ந்த 100 பயனாளிகள் பங்கேற்றனர். இதில் 100 சதவீத மானியத்தில் 5 வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் வாங்குவது குறித்தும், தொழில்முனைவோராக உருவாக்கும் வகையிலான இந்த திட்டத்தில் ஆடு கொள்முதல் செய்வது, அதற்கு காப்பீடு மற்றும் பராமரிப்பு குறித்தும் கால்நடை மருத்துவர்கள் ஜெயகாந்தி, முருகு ஆகியோர் பயிற்சி அளித்தனர். 

மேலும் செய்திகள்