எட்டயபுரம் அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

எட்டயபுரம் அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்

Update: 2022-03-15 14:58 GMT
எட்டயபுரம்:
 எட்டயபுரம் அருகே உள்ள கோடங்கிபட்டி கிராமத்தை சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவரின் மகன் நாராயணசாமி (வயது30). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது
இந்த நிலையில் நாராயணசாமி வீட்டில் இருந்து அடிக்கடி வெளியே சென்று விடுவதாகவும், குடும்பத்தினர் தேடி கண்டுபிடித்து வீட்டுக்கு அழைத்து வருவதும் வழக்கமாம். நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்றவர் இரவு முழுவதும் வீடு திரும்பாமல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று காலையில் ஊருக்கு அருகே உள்ள காட்டுப்பகுதியில் வேப்பமரத்தில் நைலான் கயிறால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதுகுறித்து தகவலறிந்த மாசார்பட்டி போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று நாராயணசாமி உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மாசார்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்