கடும் பனியால் மாமரங்களில் கருகும் பூக்கள்

வேதாரண்யம் பகுதியில் கடும் பனியால் மாமரங்களில் பூக்கள் கருகியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.;

Update: 2022-03-15 14:56 GMT
வேதாரண்யம்:
வேதாரண்யம் பகுதியில் கடும் பனியால் மாமரங்களில் பூக்கள் கருகியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
7 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த செம்போடை, தேத்தாகுடி, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், நாலுவேதபதி, ஆயக்காரன்புலம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 7 ஆயிரம்  ஏக்கரில் மாங்காய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 
ஆண்டுதோறும் இப்பகுதியில் இருந்து 5 ஆயிரம் டன் மாங்காய் வெளியூர்களுக்கு விற்பனைக்காக கொண்டு செல்வது வழக்கம்.கடந்த 2018-ம் ஆண்டு வீசிய கஜா புயலால் வேதாரண்யம் பகுதியில் இருந்த மாங்காய் மரங்கள் முற்றிலும் சாய்ந்து விழுந்து விட்டன. இதனால் விவசாயிகள் கடும் நஷ்டம் அடைந்தனர்.
மாமரங்களில் கருகும் பூக்கள்
இதை தொடர்ந்து மாமரங்களை விவசாயிகள் பராமரித்தனர். இதனால் மரங்கள் துளிர்விட்டு நன்கு வளர்ந்து பூத்து குலுங்குகிறது. தற்போது மாமரங்களில் அதிக அளவில் பிஞ்சு விட தொங்கி உள்ளதால்  நல்ல லாபம் கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்து இருந்தனர். 
இந்த நிலையில் வேதாரண்யம் பகுதியில் தற்போது கடும்பனி பொழிவு நிலவுவதால் மாமரங்களில் பூக்கள் கருகி வருகின்றன. மேலும் தேன்பூச்சி தாக்குதாலும் அதிக அளவில் பாதிக்கபட்டுள்ளன. இதனால் கவலை அடைந்துள்ள விவசாயிகள், மாமரங்களில் பூக்கள் கருகுவதை தடுக்க வேளாண்மை துறையினர் தகுந்த ஆலோசனை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்