நாமக்கல்லில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்லில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-03-15 14:56 GMT
நாமக்கல்:
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சி செய்யும், கர்நாடக அரசு மற்றும் மத்திய அரசை கண்டித்து நேற்று நாமக்கல் தபால் நிலையம் முன்பு தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட அமைப்பாளர் சக்திவேல் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தின் போது அணை கட்ட ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கிய கர்நாடக அரசை கண்டித்தும், இதன் மூலம் தமிழகத்தை பாலைவனமாக மாற்ற நினைப்பதாக கூறி, மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். இதில் மாவட்ட தலைவர் மணிராஜா, ராசிபுரம் நகர செயலாளர் செல்வேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்