கால்நடை மருத்துவ முகாம்
அகர ஒரத்தூர் ஊராட்சியில் கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.
வெளிப்பாளையம்:
நாகையை அடுத்த அகர ஒரத்தூர் ஊராட்சியில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் கணேஷ் தலைமை தாங்கினார். கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் சஞ்சீவ்ராஜ் உதவி இயக்குனர் அசன் இப்ராகிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டது. மேலும் நோயுற்ற கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பசு மற்றும் எருமை இனங்களுக்கு செயற்கை முறை கருவூட்டல், சினை பரிசோதனை, மலடு நீக்கம், கன்று மற்றும் ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம் ஆகியவை மேற்கொள்ளப்பட்டது. இதில் 300-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமிற்கான ஏற்பாடுகளை கால்நடை உதவி டாக்டர் லாரன்ஸ், கால்நடை ஆய்வாளர்கள் செந்தில்குமார், கலைவாணி மற்றும் உதவியாளர்கள் செய்திருந்தனர்.