போச்சம்பள்ளி அருகே மாந்தோப்பில் தீ விபத்து
போச்சம்பள்ளி அருகே மாந்தோப்பில் தீ விபத்து ஏற்பட்டது.;
மத்தூர்:
போச்சம்பள்ளி அருகே உள்ள கோனூர் கிராமத்தை சேர்ந்தவர் குமரேசன் (வயது 60). இவருக்கு சொந்தமான மாந்தோப்பு அந்த பகுதியில் உள்ளது. இதில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென பரவிய தீ அங்கிருந்த மா மரங்களில் பற்றி எரிந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் 30 மரங்கள் தீயில் கருகி சேதமாகின. இந்த சம்பவம் குறித்து போச்சம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.