கர்நாடக அரசை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கர்நாடக அரசை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
கிருஷ்ணகிரி:
காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்து கிருஷ்ணகிரி லண்டன்பேட்டை பி.எஸ்.என்.எல். அலுவலகம் எதிரில் கிருஷ்ணகிரி மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் பாரதி ராமச்சந்திரன், மேற்கு மாவட்ட செயலாளர் சபரி ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட தலைவர் சனாவுல்லா, தமிழர் படை மாவட்ட செயலாளர் செந்தில் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கலந்து கொண்டவர்கள் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்ட ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கிய கர்நாடக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.