பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டிய 2 வாலிபர்கள் கைது
பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஓசூர்:
ஓசூர் பார்வதி நகரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மகன் சேகர் (26). இவர் மீது போலீஸ் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இந்தநிலையில் இவர் பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும் வாகனங்களை தீ வைத்து எரித்து விடுவதாகவும் மிரட்டி வந்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ஓசூர் டவுன் போலீசார் சேகரை கைது செய்தனர். இதேபோல் பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டியதாக ஓசூர் தேர்ப்பேட்டையை சேர்ந்த வெங்கடேஷ் மகன் சிவகுமாரையும் (29) போலீசார் கைது செய்தனர்.