பரமத்திவேலூரில் தேங்காய் விலை உயர்ந்தது

பரமத்திவேலூரில் தேங்காய் விலை உயர்ந்தது.

Update: 2022-03-15 14:52 GMT
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூரில் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் தேங்காய் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 861 கிலோ தேங்காய்களை‌ விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ.29.80-க்கும், குறைந்த பட்சமாக ரூ.24.85-க்கும், சராசரியாக ரூ.26-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.22 ஆயிரத்து 764-க்கு ஏலம் நடைபெற்றது. 
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ‌ஏலத்திற்கு சுமார் ஒரு டன் தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ‌ஒன்று ரூ.30.50-க்கும், குறைந்தபட்சமாக ரூ.24-க்கும், சராசரியாக ரூ.‌29-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.29 ஆயிரத்து 910-க்கு தேங்காய் பருப்பு ஏலம் போனது. கடந்த வாரத்தை விட இந்த வாரம் தேங்காய் விலை உயர்ந்துள்ளதால் தென்னை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்