தொட்டிச்சி அம்மன் கோவிலில் மண்டல பூஜை
நத்தம் அருகே தொட்டிச்சி அம்மன் கோவிலில் மண்டல பூஜை நடந்தது.
நத்தம்:
நத்தம் அருகே காசம்பட்டி கிராமத்தில் உள்ள தொட்டிச்சி அம்மன், கருப்புசாமி கோவில் மற்றும் பரிவார தெய்வங்களுக்கான கும்பாபிஷேக விழா ஏற்கனவே நடந்து முடிந்தது. இதையொட்டி தினமும் கோவிலில் பூஜைகள் நடந்தன.
இந்தநிலையில் இன்று 48-வது நாள் மண்டல பூஜை நடந்தது. சிவாச்சாரியர்களின் வேத மந்திரங்கள் முழங்க யாகசாலையில் பூஜைகள் நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து சாமிகளுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. இதில் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.