பாரம்பரிய உணவு பொருள் கண்காட்சி

பழனி அரசு பள்ளியில் பாரம்பரிய உணவு பொருள் கண்காட்சி நடந்தது.

Update: 2022-03-15 14:24 GMT
பழனி: 

பழனி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பாரம்பரிய உணவுப்பொருள் கண்காட்சி நடந்தது. இதற்கு தலைமை ஆசிரியர் அருள் ஜோதி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பாலசுப்பிரமணியன் கலந்துகொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்தார். 

இதில் பள்ளி மாணவிகள் இயற்கை உணவு பொருட்களை காட்சிக்கு வைத்திருந்தனர். இதை பலர் பார்வையிட்டனர். கண்காட்சியில் வைக்கப்பட்ட சிறந்த படைப்புக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்