நுகர்வோர் தின விழா

திண்டுக்கல் பான் செக்கர்ஸ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக நுகர்வோர் தின விழா நடைபெற்றது.

Update: 2022-03-15 14:11 GMT
திண்டுக்கல் :

திண்டுக்கல் பான் செக்கர்ஸ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக நுகர்வோர் தின விழா, நுகர்வோர் மன்றம் தொடக்க விழா நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மைய மாவட்ட செயலாளர் நாகராஜன் தலைமை தாங்கினார். கல்லூரி நிர்வாக அலுவலர் பார்த்தலோமியோ, முதல்வர் காயத்ரி, துணை முதல்வர் அமலிபுஷ்பம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

விழாவில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சிவராம பாண்டியன், திண்டுக்கல் உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வம் ஆகியோர் நுகர்வோரின் கடமைகள், தரமான பொருட்கள் மற்றும் கலப்பட பொருட்களை எவ்வாறு கண்டறிவது என்பது குறித்து பேசினர். 

அதனைத்தொடர்ந்து கலப்பட பொருட்களை கண்டறியும் முறை குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. விழாவில் நுகர்வோர் பாதுகாப்பு மைய நிர்வாகிகள், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக நுகர்வோர் தினத்தையொட்டி கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

மேலும் செய்திகள்