காஞ்சீபுர பெண் போலீசாருக்கு மருத்துவ முகாம்
மகளிர் தினத்தை முன்னிட்டு அனைத்து பெண் போலீசார் மற்றும் அவர்களது குடும்பத்தை சேர்ந்த பெண்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள அனைத்து போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும் தமிழக டி.ஐ.ஜி. சி.சைலேந்திரபாபு உத்தரவிட்டிருந்தார்.
இதன் ஒரு பகுதியாக காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி. எம்.சத்திய பிரியா மற்றும் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகர் ஆகியோர் தலைமையில் காஞ்சீபுரத்தில் மருத்துவ முகாம் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த முகாமில் பெண் போலீசார் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உட்பட 160 பேர் கலந்துக்கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் டி.ஐ.ஜி. சத்யபிரியா பேசுகையில்:-
போலீசார் தங்கள் உடல் நிலையை சரியான முறையில் பரிசோதனைகளை மேற்கொண்டு அதற்கான தீர்வுகளை முறையாக கையாள வேண்டும் எனவும் உடல்நலனில் அக்கறை கொண்டால் அனைத்து செயல்களும் சிறப்பாக இருக்கும் என தெரிவித்தார்.