திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தை, தமிழக வாழ்வுரிமை கட்சியினர் முற்றுகை

திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தை, தமிழக வாழ்வுரிமை கட்சியினர் முற்றுகை

Update: 2022-03-15 13:03 GMT
திருச்சி, மார்ச்.16-
கர்நாடக அரசு, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிதாக அணை்கட்டுவதை எதிர்த்து திருச்சி தில்லைநகர் சாஸ்திரி சாலையில் உள்ள மத்திய அரசின் பாஸ்போர்ட் அலுவலகத்தை முற்றுகையிட்டு நேற்று தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு தமிழக வாழ்வுரிமை கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ராயல் ராஜா தலைமை தாங்கினார். திருச்சி புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ராவணன் ராஜேஷ், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பிரணவேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைஞர் அணி செயலாளர் பாரத் வரவேற்று பேசினார். போராட்டத்தில் மாநில கொள்கை பரப்பு செயலாளர் திருப்பூர் சுடலை  கண்டன உரையாற்றினார்.
போராட்டத்தின்போது நிர்வாகிகள் பேசுகையில், ‘கர்நாடக அரசு தொடர்ந்து தமிழகத்திற்கு இடையூறு செய்து வருகிறது. காவிரி நதி நீர் பிரச்சினையில் இருந்து தற்போது அணை கட்டும் முயற்சி வரை கர்நாடக அரசுக்கு மத்திய அரசு சாதகமாக செயல்படுகிறது. இது கண்டனத்திற்குரியது. கர்நாடக அரசு மேகதாதுவில் அணைகட்டினால் தமிழன் யார் என்று தெரியும். விரைவில் தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில தலைவர் வேல்முருகன் தலைமையில் 1 லட்சம் பேர் திரண்டு சென்று மேகதாதுவை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்’ என்றனர்.

மேலும் செய்திகள்