திருக்கழுக்குன்றம் அருகே கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி
திருக்கழுக்குன்றம் அருகே கிணற்றில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக பலியானார்.
குளிக்க சென்றார்
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த கருப்பங்காடு கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் கோபிநாத் (வயது 24). இவர் கடும்பாடி சாலை கருப்பங்காடு கிராமத்தில் நடந்த இறுதி சடங்கு ஒன்றில் கலந்து கொண்டார். பின்னர் இருசக்கர வாகனத்தில் கம்பையாபுரம் பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் குளிக்க சென்றார்.
அப்போதுகிணற்றில் மூழ்கியுள்ளார். கிணற்றின் வெளியே வாகனம் மற்றும் செல்போன் இருந்துள்ளது. அவரது செருப்பு நீரில் மிதந்துள்ளது. இதை பார்த்த அந்த ்பகுதி மக்கள் திருக்கழுக்குன்றம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே திருக்கழுக்குன்றம் தீயணைப்பு துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
உடல் மீட்பு
4 மோட்டார்கள் உதவியுடன் கிணற்றில் இருந்த நீரை வெளியேற்றினர். பின்னர் சேற்றில் சிக்கி இருந்த கோபிநாத்தின் உடலை மீட்டனர். உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.