காவேரிப்பாக்கம் சுற்று வட்டார பகுதிகளில் நாளை மின் வினியோகம் நிறுத்தம்
காவேரிப்பாக்கம் சுற்று வட்டார பகுதிகளில் நாளை பராமரிப்பு பணிகளுக்காக மின்நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
காவேரிப்பாக்கம் சுற்று வட்டார பகுதிகளில் நாளை பராமரிப்பு பணிகளுக்காக மின்நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
வேலூர் மின் பகிர்மான வட்டத்தைச் சேர்ந்த காவேரிப்பாக்கம் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் அன்று காலை 9 மணி முதல் மாலை 3மணி வரை காவேரிப்பாக்கம், அத்திப்பட்டு, ஆலப்பாக்கம், மாமண்டூர், வேகாமங்களம், முசிறி, துறைபெரும்பாக்கம், மகாணிப்பட்டு, கட்டளை, அய்யம்பேட்டைசேரி, உப்பரந்தாங்கல், ராஜபாளையம், பன்னியூர்கூட்ரோடு, பெரிய கிராமம், ஈராள்சேரி, ராமாபுரம், கடப்பேரி, சுமைதாங்கி, திருப்பாற்கடல் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என சோளிங்கர் செயற்பொறியாளர் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.