ஏகாம்பரநாதர் கோவிலில் தேரோட்டம்

காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் பங்குனி உத்திரம் திருக்கல்யாணப் பெருவிழாவினையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

Update: 2022-03-15 12:23 GMT
அதன் பிறகு பட்டு உடுத்தி, மல்லிகை பூ, ரோஜா பூ, சம்பங்கி பூ, மாலைகள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட தேரில் மேளதாளங்கள் முழங்க சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பின்னர் கோவில் வளாகத்தில் இருந்து புறப்பட்டு சங்கரமடம், பூக்கடை சத்திரம், பஸ் நிலையம், கச்சபேஸ்வர் கோவில் மற்றும் நான்கு ராஜ வீதிகள் வழியாக வீதிஉலா வந்து அருள் பாளித்தார். அப்போது வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் கூடி நின்று ஏகாம்பரநாதர் சுவாமியை தரிசித்து வழிபட்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் என்.தியாகராஜன், முன்னாள் மேலாளர் சீனிவாசன் மற்றும் கோவில் அர்ச்சகர்கள், பணியாளர்கள் செய்து இருந்தனர்.

மேலும் செய்திகள்