வால்பாறையில் வங்கிகளின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம்

வால்பாறையில் வங்கிகளின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.;

Update:2022-03-15 17:12 IST
வால்பாறை

வால்பாறை தாசில்தார் அலுவலகத்தில் கோவை மாவட்ட முன்னோடி வங்கியின் சார்பில் வால்பாறை பகுதியில் உள்ள வங்கிகளின் செயல்பாடுகள், வங்கிகளின் சேவை மூலம் வாடிக்கையாளர்களுக்கு செய்து கொடுக்கப்படும் வசதிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ரிசர்வ் வங்கியின் துணை பொது மேலாளர் ராஜன்பாபு கருணாமூர்த்தி தலைமை தாங்கினார். வால்பாறை தாசில்தார் குமார், கோவை மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கவுசல்யாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வால்பாறையில் கூடுதலாக ஏ.டி.எம். மையங்கள் அமைக்கப்படும் என்றும், சோலையாறு அணை பகுதியில் ஏதாவது ஒரு வங்கியின் கிளை தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது. 
இதில், வால்பாறை இந்தியன் வங்கி மேலாளர் வெள்ளைச்சாமி, மகளிர் திட்ட ஒருங்கிணைப்பாளர் வாசுகி, வால்பாறை பகுதியை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழு பெண்கள், பழங்குடியின கிராம மக்கள், சிறு வியாபரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

மேலும் செய்திகள்