வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி
தூத்துக்குடி அரசினர் தொழிற்பயிற்சி பள்ளியில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி அளிக்கப்படுவதாக, தூத்துக்குடி கோரம்பள்ளம் தொழிற்பயிற்சி நிலைய துணை இயக்குனர் மற்றும் முதல்வர் பழனி தெரிவித்துள்ளார்
தூத்துக்குடி:
தூத்துக்குடி அரசினர் தொழிற்பயிற்சி பள்ளியில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி அளிக்கப்படுவதாக, தூத்துக்குடி கோரம்பள்ளம் தொழிற்பயிற்சி நிலைய துணை இயக்குனர் மற்றும் முதல்வர் பழனி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
குறுகியகால தொழிற்பயிற்சி
தூத்துக்குடி கோரம்பள்ளம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பி.எம்.கே.வி. 3.0 திட்டத்தின் அடிப்படையில் தேசிய கல்வி கொள்கையின்படி மத்திய அரசு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய திறன் அளிக்கும் இலவச பயிற்சி திட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கி உள்ளது.
இந்த இலவச பயிற்சி திட்டத்தின் மூலம் வீட்டு உபயோக மின்சாதன பொருட்கள் பழுது சரி செய்தல் மற்றும் டொமஸ்டிக் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் ஆகிய தொழிற்பிரிவுகளுக்கு குறுகிய கால பயிற்சி அளிக்கப்படுகிறது.
தகுதிகள்
இந்த பயிற்சியில் சேருவதற்கு 10-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 10-ஆம் வகுப்பிற்கு மேல் படித்தவர்களாக இருக்க வேண்டும். மேலும் 15 வயது முதல் 45 வயதுக்கு உள்ளவராக இருக்க வேண்டும். இந்தபயிற்சியை முடித்தவர்களுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் உடனடியாக வேலைவாய்ப்பு கிடைக்கும்.
எனவே வேலையில்லாத தகுதி உள்ளவர்கள் சேர்ந்து பயன்பெறலாம். இதில் சேர விரும்புவோர் அரசினர் தொழில் பயிற்சி நிலைய துணை இயக்குநர் மற்றும் முதல்வரை நேரில் சந்தித்து சேர்ந்து கொள்ளலாம். மேலும் அலுவலக தொலைபேசி எண் 0461-2340133 இல் தொடர்பு கொண்டு மேலும் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.