தியேட்டர் அருகே முட்புதரில் தீ

தியேட்டர் அருகே முட்புதர் தீப்பற்றி எரிந்தது.

Update: 2022-03-14 21:41 GMT
பெரம்பலூர்:
பெரம்பலூர் ரோவர் வளைவு அருகே ஒரு சினிமா தியேட்டரின் பின்புறம் காலிமனையில் உள்ள முட்புதர்கள் நேற்று காலை திடீரென்று தீப்பற்றி எரிந்தன. இதனை கண்டவர்கள் உடனடியாக இதுகுறித்து பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து முட்புதர்களில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

மேலும் செய்திகள்